”தேர்தல் ரேஸில் மார்க்சிஸ்ட் கைகோர்க்குமா தி.மு.கவுடன்?” ராமகிருஷ்ணன் பேட்டி
சென்னை: தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்குமா என்பது குறித்து மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி சேருமா என்பதற்கு அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பதில் அளித்து ,தி.மு.க கூட்டணியில் பேச்சு வார்த்தை நடக்குமா என்பதைப் பற்றியும் கூறியுள்ளார்.

ஏப்ரல் 24 ஆம் தேதி நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை நிச்சயமாக இடம் பெறும் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக தோழமை கட்சிகளாக இருந்த இந்த இரு கட்சிகளும் இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தென்காசி, நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகளையும் கேட்டு மறைமுகமான பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் தெரிகிறது.
இந்த இரு கட்சிகளுமே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணங்கள் இது வரையில், வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது, "அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக கடந்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கி இரு கட்சி தேர்தல் குழுக்களும் 6 முறை பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் அமைச்சர் ஜெயலலிதா, 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு ஏற்பட்ட பிறகு, அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள் என்று அறிவித்ததால் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம்.
இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி முதல்அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அன்றைய தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற முறையில் அவருக்கு நாங்கள் ஒரு கடிதம் எழுதினோம்.
தேர்தல் தேதியை எந்த நேரத்திலும் தேர்தல் கமிஷன் அறிவித்துவிடும் நிலை இருக்கிறது. எனவே நாங்களும் தேர்தலுக்கான தயாரிப்பு பணியில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம். ஆகவே தொகுதி ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும். 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் எங்கள் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தை கூட்டியுள்ளோம் என்று எழுதியிருந்தோம்.
4 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் எங்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்து, 24 ஆம் தேதி அம்மா வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்கள். உங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்கள். இப்போது ஆம் தேதி பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் நீங்கள் தொகுதி உடன்பாடு தொடர்பாக சம்மதித்து விடுவீர்கள் என்று நினைத்தோம். நீங்கள் தான் முடிக்கவில்லை என்று கூறினார்கள்.
அவர்கள் இவ்வாறு கூறியவுடன் நாங்கள் பெரும் அதிர்ச்சியடைந்தோம். நீங்கள் தொடக்கத்தில் இருந்தே எங்கள் இரு கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் என்றால் என்ன அர்த்தம். கடந்த தேர்தலின் போது நமது கூட்டணியில் கூடுதலாக 2 கட்சிகள் இருந்தது. அப்போது, பா.ம.க.வுக்கு 7 இடங்களும், ம.தி.மு.க.வுக்கு 4 இடங்களும் கொடுத்தீர்கள். இப்போது அந்த 2 கட்சிகளும் கூட்டணியில் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே உள்ளோம். அந்த இரு கட்சிகளும் இல்லாத நேரத்திலும் எங்களுக்கு தலா ஒரு தொகுதி என்பதை ஏற்க முடியாது என்றோம்.
4 ஆம் தேதி எங்கள் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் 90 பேரும், இரவு நடந்த செயற்குழு கூட்டத்தில் 15 பேரும் கலந்துகொண்டனர். எல்லோருமே அ.தி.மு.க.வுடன் விரைவில் தொகுதி உடன்பாட்டை முடிக்க வேண்டும் என்றே வற்புறுத்திக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், திடீரென 3 அமைச்சர்களும் வந்து, அம்மா பிரசாரத்தை முடித்துவிட்டார்கள். 6 ஆம் தேதி மேலும் 2 தொகுதிகளில் பிரசாரம் செய்யப்போகிறார்கள். எல்லா தொகுதிகளிலும் தேர்தல் வேலைகளை எங்கள் கட்சி தொடங்கிவிட்டது. சந்தோஷமாக சேர்ந்தோம். சந்தோஷமாக பிரிவோம் என்று கூறி கூட்டணியை முறித்துவிட்டு சென்றுவிட்டார்கள்.
எனவே 5 ஆம் தேதி எங்கள் மாநிலக்குழு விவாத பொருட்கள் எல்லாம் மாற்றப்பட்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று விவாதித்து இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் சேர்ந்து, ஓரணியில் நின்று தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவு செய்தோம்.
எங்களை பொறுத்த மட்டில் 3 முக்கிய விஷயங்களை அடிப்படையாக வைத்து தேர்தலை எதிர்கொள்கிறோம்.
வகுப்புவாத எதிர்ப்பு, நவீன தாராளமய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றை வைத்துத்தான் தேர்தலை எதிர்கொள்வோம்.
இந்த நிலையில் இன்று மீண்டும் இரு கட்சி தலைவர்களும் கூடி எந்த வகையில் தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவு செய்ய இருக்கிறோம். இதுவரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தி.மு.க.வுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை" என்று கூறினார் அவர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications