இங்குதான் ராம்குமார் வயரைக் கடித்து "தற்கொலை" செய்து கொண்டாரா?
சென்னை: சென்னை புழல் சிறையில் ராம்குமார் வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்ட இடம் இதுதான் என்று கூறி சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து தி நியூஸ்மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ராம்குமார் இந்த சிறை அறையில்தான் இருந்தார் என்றும், இந்த இடத்தில் உள்ள சுவிட்ச் பாக்ஸைத்தான் உடைத்து வயரைக் கடித்துக் கொண்டதாக சிறை அதிகாரிகள் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாரின் மரணம், சுவாதி கொலையை விட மர்மம் நிறைந்ததாக உள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பது மிகப் பெரிய புதிராக மாறியுள்ளது. தங்களது மகனை கொலை செய்து விட்டதாக ராம்குமாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகளும் கூட இது கொலை என்றுதான் கூறி வருகின்றன.
Images leaked: Is this the spot in prison where Ramkumar 'committed suicide'?https://t.co/lD6Jgnfx5K
— TheNewsMinute (@thenewsminute) September 21, 2016
இந்த நிலையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட இடம் என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை நியூஸ்மினிட்டும் வெளியிட்டுள்ளது.
இரண்டு போட்டோக்கள் இதில் உள்ளன. லாங் ஷாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நீண்ட காரிடார் தெரிகிறது. அதன் குளோசப் படத்தில் அறைக்கு வெளியே சுவிட்ச் பாக்ஸ் ஒன்று உடைக்கப்பட்டு வயர்கள் தொங்குவது போலத் தெரிகிறது. இந்த வயரைத்தான் பிடித்துக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதா சொல்லப்படுகிறது.
இந்தப் படங்களின் நம்பகத்தன்மை தெரியவில்லை. இது புழல் சிறை அறையா, இங்குதான் ராம்குமார் தங்கியிருந்தாரா என்பது தெரியவில்லை.
இருப்பினும் இந்த இடத்தில்தான் ராம்குமார் தங்கியிருந்ததாகவும், இந்த சுவிட்ச் பாக்ஸைத்தான் உடைத்து வயரைக் கடித்து உயிரிழந்ததாகவும் பெயர் சொல்ல விரும்பாத சிறை அதிகாரி ஒருவர் கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ராம்குமார் மரணம் தொடர்பாக பல குழப்பங்கள், கேள்விகள், சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில் தற்போது ராம்குமார் கடித்துக் கொண்டதாக கூறப்படும் வயர் குறித்த படங்கள் வெளியாகியுள்ளது புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications