வல்லரசு நாடுகளுடன் போட்டியிடும் இஸ்ரோ- விஞ்ஞானி பேட்டி
நெல்லை: வல்லரசு நாடுகளுடன் போட்டியிடும் வகையில் இஸ்ரோவின் செயல்பாடு மாறி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானி கூறியுள்ளார்.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள அறிவியல் மையத்தில், உலக விண்வெளி வாரத்தையொட்டி கடந்த 4ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தண்ணீர் ராக்கெட் போட்டி பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. போட்டி தனிநபர் போட்டியாகவும், குழு போட்டியாகவும் நடத்தப்பட்டன.

இதில் 11 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 104 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் வடிவமைத்த 54 ராக்கெட்டுகள் போட்டியில் கலந்து கொண்டன. மாணவமாணவிகள் தண்ணீர் மூலம் தாங்கள் தயாரித்த ராக்கெட் மாதிரிகளை உயரமாக செல்லும் வகையில் பம்பு மூலம் அழுத்தம் கொடுத்தார்கள். இதில் அதிக உயரத்துக்கு சென்ற ராக்கெட்டுகள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட அறிவியல் மைய அலுவலர் ராம்குமார் தலைமை வகித்தார். இஸ்ரோவின் விஞ்ஞானி டேவிட் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.
இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடு முழுவதும் விண்வெளி வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மத்தியில் விண்வெளி கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
விண்வெளி துறையில் இந்தியா பல சாதனைகளை படைத்து வருகிறது. நவீன தொலை தொடர்பு செயற்கைகோளான ஜிசாட் 18 பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் ராக்கெட் மூலம் வெற்றிக்கரமாக ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் பூமி வட்டபாதைக்கு உயர்த்தப்பட்டதும் கர்நாடக மாநிலம் ஹசனில் உள்ள இஸ்ரோ மையம் மூலம் கண்காணிக்கப்படும்.
விண்வெளி ஆய்வுகள் குறித்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனை பொறியியல் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். விண்வெளி ஆய்வில் இந்தியா வல்லரசு நாடுகளுடன் போட்டியிடும் வகையில் வளர்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications