கிறிஸ்டி நிறுவனத்தில் 5வது நாளாக ரெய்டு.. கூட்டுறவு வங்கியில் ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம்
கிருஷ்டி ஃபிரைடுகிராம் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ஐந்தாவது நாளாக சோதனை செய்து வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: கிருஷ்டி ஃபிரைடுகிராம் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ஐந்தாவது நாளாக சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்கள் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம் ஆகியுள்ளது. 5 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர் புகார் வந்துள்ளது. அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை செய்து வருகிறது கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனம். தொடர் புகார் வந்ததால் வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது..முதல் இரண்டு நாட்கள் சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரில் வருமான வரி சோதனை செய்தனர்.
அதேபோல் கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்த இடங்களில் எல்லாம் சோதனை நடந்தப்பட்டது. திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடந்தது. தற்போது 5 ஆம் நாளாக வருமானவரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு ஆண்டிப்பாளைய தலைமை அலுவலகத்தில் தற்போது சோதனை நடக்கிறது.முறைகேடாக சம்பாரிக்கப்பட்ட 10 கிலோ தங்கம், ரூ.17 கோடி பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அவர்கள் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம் ஆகியுள்ளது.
பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பியதில் அவர் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் முடிவில் வரித்துறை சோதனையை தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி கைது செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications