காலா படத்தை இப்போது வெளியிடுவது தவறு.. சரத்குமார் எதிர்ப்பு
தூத்துக்குடி பிரச்சனை மக்களை பாதித்து இருக்கும் நிலையில் காலா படத்தை இப்போது வெளியிட முடிவெடுத்து இருக்க கூடாது என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: தூத்துக்குடி பிரச்சனை மக்களை பாதித்து இருக்கும் நிலையில் காலா படத்தை இப்போது வெளியிட முடிவெடுத்து இருக்க கூடாது என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த கொடூரமான காப்பர் ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் காலா படம் இந்த வாரம் வியாழக்கிழமை வெளியாகி உள்ளது. இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
அதில் தூத்துக்குடி பிரச்சனை மக்களை பாதித்து இருக்கும் நிலையில் காலா படத்தை இப்போது வெளியிட முடிவெடுத்து இருக்க கூடாது. காலா பட வெளியீட்டை கொஞ்சம் தள்ளி வைத்து இருக்கலாம்.
கமல் கர்நாடக சென்று பேசியது தவறு. அவர் தன்னை மக்களின் பிரதிநிதி என்று கூறியதும் தவறும். மக்களின் பிரதிநிதி யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நீட் பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீட் தற்கொலைகளை பார்க்கும் போது, நீட் தேர்வை இன்னும் கொஞ்ச காலம் கழித்து நடத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது, என்றுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications