என் நேர்மைக்கு கிடைத்த பரிசு...‘பதவி நீக்கம்’ குறித்து புதுவை கவர்னர் வீரேந்திர கட்டாரியா கருத்து!
புதுவை: என் நேர்மைக்குக் கிடைத்த பரிசாக இந்தப் பதவி நீக்கத்தை கருதுகிறேன் என புதுவை கவர்னர் வீரேந்திர கட்டாரியா தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு புதுவைக் கவர்னராக பதவியேற்றவர் வீரேந்திர கட்டாரியா. பதவியேற்ற நாள் முதற்கொண்டு புதுவை முதல்வர் ரங்கசாமிக்கும், கவர்னருக்கும் மோதல் தொடங்கியது. இந்நிலையில், சமீபத்தில் மத்தியில் நடந்த ஆட்சி மாற்றத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ரங்கசாமி, வீரேந்திர கட்டாரியாவை பதவி நீக்கம் செய்யும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து வற்புறுத்தி வந்தார்.
இதற்கிடையே, கவர்னர் வீரேந்திர கட்டாரியாவும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரைச் சந்தித்து தனது மாற்றத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தார். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி திடீரென கவர்னர் பதவியிலிருந்து வீரேந்திர கட்டாரியா நீக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பு சங்கராச்சாரியார் மீதான கொலை வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கவர்னர் கட்டாரியா அப்பீல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இதனால்தான் கவர்னர் திடீரென மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வீரேந்திர கட்டாரியா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
நான் கருவி தான்...
எனக்கு எதிராக செயல்படும் ஒருசில சக்திகள் சங்கரராமன் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்வதற்கு நான்தான் முக்கிய காரணம் என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளன. இந்த விஷயத்தில் நான் ஒரு கருவியாக்கப்பட்டுள்ளேன்.
தவறான வழிநடத்தல்...
இது ஒரு சிக்கலான வழக்காக இருந்தும் எனக்கு சரியான முறையில் தகவல்களை அளிக்கவில்லை. இந்த விஷயத்தில் ஒரு சில சக்திகள் என்னை தவறாக வழிநடத்தி விட்டனர்.
பரிந்துரை....
புதுவை கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவேண்டும் என்று தமிழக அரசும், புதுவை அரசும் பரிந்துரை செய்தனர். தமிழ்நாடு அரசு வக்கீலும் இதில் அப்பில் செய்யவேண்டும் என்று பரிந்துரைத்தார்.
வேண்டுகோள்...
தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர், சி.பி.சி.ஐ.டி. துறைக்கு இதில் அப்பீல் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. பாண்டிச்சேரி தலைமை செயலாளருக்கு அப்பீல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒப்புதல்...
அதைத் தொடர்ந்தே அப்பீலுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவை முதலமைச்சர், தலைமை செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் அப்பீல் செய்யலாம் என ஒப்புதல் அளித்துள்ளனர்.
பரிசு...
எனது நீக்கத்தை எனது நேர்மைக்கு கிடைத்த பரிசாக நான் கருதுகிறேன். நான் ஊழலை முற்றிலும் எதிர்த்து வந்தேன். சட்ட ஒழுங்கை சிறப்பாக செயல்பட வைக்க முயற்சித்தேன். சென்டாக் கமிட்டியில் நேர்மையான அதிகாரியை நியமனம் செய்ய வைத்தேன்.
வீண் அரசியல் நடவடிக்கைகள்...
ஐ.ஏ.எஸ். அதிகாரி இருக்க வேண்டிய கலெக்டர் பதவியில் பி.சி.எஸ். அதிகாரியை நியமிக்க முதலமைச்சர் சிபாரிசு செய்தார். அதற்கு நான் அனுமதி கொடுக்கவில்லை. யாருக்காகவும் விதிமுறைகளையும், ஒழுங்குகளையும் நான் மீறவில்லை. நான் வீண் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications