செங்கோட்டை அருகே தனியார் மர அறுவை ஆலைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு
செங்கோட்டை அருகே தனியார் மர அறுவை ஆலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
செங்கோட்டை : செங்கோட்டை அருகே உள்ள பிரபல தனியார் மர அறுவை ஆலைகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள பிரானூர் பார்டரில் நுற்றுக்கணக்கான தனியார் மர அறுவை ஆலைகள் உள்ளது. இந்த ஆலைகளுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கப்பல் மூலம் கண்டெய்னர்கள் மூலம் மரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு மரங்கள் சைஸ் வாரியாக அறுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இங்குள்ள மர அறுவை ஆலைகளில் மிகவும் பிரபலமானது பிரபாத் அறுவை மில்,விஸ்வம் எக்சிம் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள். இந்த நிறுவனத்தினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மர அறுவை ஆலைகளை நடத்திவருகின்றனர்.மேலும் சர்க்கரை ஆலையையும் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் நிறுவனங்களில் ஏற்றுமதி,இறக்குமதி முறைகேடுகள் நடப்பதாகவும் முறையான கணக்குகளை காட்டாமல் இருப்பதாகவும் வருமானவரித் துறையினருக்கு புகார்கள் வரவே நெல்லை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், கொல்லம், ஆகிய பகுதிகளில் இருந்து 5 வாகனங்களில் 15க்கும் மேற்ப்பாட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் அந்த ஆலைகளுக்கு வந்துள்ளனர்.

தற்போது மேற்கண்ட நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.இந்த சோதனையில் வாகனங்கள், நிலங்கள், தங்கம், இருப்பிலுள்ள மரங்கள் ஆகியவற்றையும் ஆய்வுசெய்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications