ஆவடி அதிமுக நிர்வாகி வீட்டில் ஐ.டி. ரெய்டு... பணம் கொடுத்த ஓசூர் அதிமுக கவுன்சிலர் கைது
சென்னை: சென்னை ஆவடியில் உள்ள அதிமுக வட்டச் செயலாளர் முனுசாமியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பணியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை ஆவடியில் வசிக்கும் அதிமுக வட்டச் செயலாளர் முனுசாமியின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். 5 பேர் கொண்ட குழு இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
முன்னதாக ஓசூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 36வது வார்டு அதிமுக கவுன்சிலர் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.2.6 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே அரவக்குறிச்சி தொகுதி அதிமுக நிர்வாகி அன்புநாதனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications