விஜய் அண்ணா வீட்டில் ஐ.டி. ரெய்டா?: ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: இளையதளபதி விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ள புலி படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. புலி படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ஆவலாக உள்ளனர் விஜய் ரசிகர்கள். கடந்த சில நாட்களாகவே அவர்கள் புலி படம் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து அதை டிரெண்டாக்கவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று புலிபுயல்(pulistorm) என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாகவிட்டுள்ளனர். இந்த சூழலில் ரசிகர்கள் மனதில் புயலை கிளப்பும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் வீடு மற்றும் புலி படக்குழுவினரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள் என்பதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நாளை படம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படி சோதனை நடக்கிறதே என்று அவர்கள் கவலை அடைந்துள்ளனர். புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தில் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து தான் அவர்கள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.
விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பற்றி கோடம்பாக்கத்திலும் பரபரப்பாக பேசிக் கொள்ளப்படுகிறது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications