கலாம் மறைவைக் கூட அறியாமல் குற்றால சாரல் விழாவில் குத்தாட்டம்!
குற்றாலம்: மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவை மறந்து குற்றாலம் சாரல் விழாவில் குத்தாட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றாலத்தில் சாரல்விழா கடந்த 25 ம் தேதி கலைநிகழ்ச்சிகளோடு தொடங்கியது. 3 வது நாளான நேற்று நாய் கண்காட்சி நடைபெற்றது. அதன் பின் மாலை 6 மணிக்கு இலஞ்சி பாரத் பள்ளி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், குஜராத் கலைக் குழுவினரின் பாரம்பரிய நடனம் ஆகியவை நடைபெற்றன.

அதன் பின் இரவு 7 மணிக்கு மேல் ஜெ.ஜெ. நாடக மன்றம் சார்பில் ஆடல், பாடல், மோகன் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி, திருநங்கைகளின் கதம்ப விழாக்களும் இடம் பெற்றன.

இதில் ஒரு குழுவினர் குத்தாட்டத்தில் இறங்கி பார்வையாளர்களை கிறங்கடித்தனர். நாட்டின் முதல் குடிமகனாக இருந்த அறிவியல் ஆசான் அப்துல் கலாம் மறைவை மறந்து குற்றால சாரல் விழாவில் குத்தாட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி நிறைவு நெருங்கும் சமயம் தான் அனைவருக்கும் அப்துல் கலாம் மறைவு தெரிய வந்ததாம்.













Click it and Unblock the Notifications