எதிர்க்கட்சிகளே இல்லாமல் அவையை நடத்துவது ஒரு முதல்வருக்கு அவமானகரமானது: துரைமுருகன்
எதிர்க்கட்சிகளே இல்லாமல் அவையை நடத்துவது ஒரு முதல்வருக்கு அவமானகரமானது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : எதிர்க்கட்சிகளே இல்லாமல் அவையை நடத்துவது ஒரு முதல்வருக்கு அவமானகரமானது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டுமென்கிற கோரிக்கையை முன்வைத்து திமுக பட்ஜெட் மானியக்கோரிக்கை விவாதத்தை புறக்கணித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை தொடங்கியது. இதில், திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் சட்டசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் , ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திமுக முதன்மைச் செயலாளர் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி விவகாரத்தில் தமிழக அரசு காலம் கடந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால், அதற்கு அரசு பொறுப்பேற்க மறுக்கிறது.
எதிர்க்கட்சிகள் இல்லாமல் சபையை நடத்துவது ஒரு முதல்வருக்கு மிகவும் அவமானகரமானது. எதிர்க்கட்சிகள் வெளியேறினால் அவர்களை அழைத்து வரச் சொன்னவர் அன்றைய முதல்வர் கருணாநிதி. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்.
துப்பாக்கிச்சூட்டை டிவியில் தான் பார்த்தேன் என்று ஒரு முதல்வர் சொல்வது மிகவும் கேவலமானது. எடப்பாடி பழனிசாமி இதுவரை அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சென்று பார்க்கவில்லை. துப்பாக்கிச்சூடு குறித்த விவரம் அரசின் அறிக்கையில் இல்லை . இந்த அரசின் மீதான வெறுப்பு மக்களுக்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications