For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது.. சொல்கிறார் திருநாவுக்கரசர்!

காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விவசாயிகளின் தலையில் இடியை இறக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு- வீடியோ

    சென்னை: காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்துக்கான காவிரி நீரை உச்சநீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உத்தரவிடப்பட்ட 192 டிஎம்சியில் இருந்து 177.25 டிஎம்சி நீராக குறைத்துஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Its sad the water for Tamil Nadu is reduced: Thirunavukarasar

    இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு தமிழக அரசியல் தலைவர்களும் விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் காவிரிக்கு எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்புதான் என்றும் அவர் கூறினார். நிலத்தடி நீரை கணக்கிட்டு கர்நாடகாவுக்கு கூடுதல் நீர் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் நிலத்தடி நீர் இப்போது இல்லை என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamil Nadu Congress leader Tirunavukkarasar has said that Its sad the water for Tamil Nadu has been reduced. But He welcomes that any state can not claim ownership for Cauvery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X