Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் ஸ்டைலுக்கு என்ன காரணம்?... குபீர் சிரிப்புடன் மனம் திறந்த தீபா!

கடந்த ஒரு மாதமாக உடை, அலங்காரத்தில் மாற்றம் இருப்பது குறித்து ஜெ. தீபா மனம் திறந்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    புதிய லுக்கில் தெறிக்கவிட்ட ஜெ.தீபா... வேட்புமனு தாக்கல் செய்ய வந்த கெட்டப்பை பாருங்க

    சென்னை : கடந்த ஒரு மாதமாக ஜெ. தீபாவின் நடை, உடை, அலங்காரத்தில் வந்துள்ள மாற்றம் குறித்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா மனம் திறந்து கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் தனக்கு என்ன தோன்றுகிறதோ அது தான், ஸ்டைல், மற்றவர்களைப் பார்த்து எனக்கு காப்பியடிக்கத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

    ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜெ. பிறந்தநாளில் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு தனிக் கட்சித் தொடங்குவதாக ஜெ.தீபா அறிவித்தார். அதிமுக தலைமையில் குழப்பம் இருந்த போது அவரை அந்த பொறுப்பிற்கு கொண்டு வருவதற்காக ஒரு சில அதிமுகவினர் முயன்றனர்.

    இதற்காக மாவட்டந்தோறும் ஜெ. தீபா பேரவை எல்லாம் தொடங்கப்பட்டது. ஆனால் தெளிவற்ற தீபாவின் நிலையால் அவரது பேரவைக்குக் கூட ஆட்களை சேர்ப்பதே சிரமமாகிப் போனது. இருப்பினும் தான் தொடங்கிய பேரவையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் ஜெ. தீபா.

    மரியாதையை குறைத்துக் கொண்ட தீபா

    மரியாதையை குறைத்துக் கொண்ட தீபா

    போயஸ் கார்டன் பிரச்னையில் சகோதரர் தீபக் மற்றும் சசிகலாவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதால் அவர் மீது இருந்த மரியாதை மேலும் குறைந்தது. இந்நிலையில் சமீப காலமாக அவரது தோற்றத்தில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன.

    எப்படி இருந்த தீபா?

    எப்படி இருந்த தீபா?

    மீடியாக்களின் பார்வைக்கு வந்தது முதலே தீபா என்றால் சல்வார் போட்டுக்கொண்டு எப்போதும் மேலே ஒரு ஓனியை போர்த்திக் கொண்டு தான் இருப்பார் தீபா. அதே போன்று ஹேர்ஸ்டைலிலும் பெரிதாக கவனம் செலுத்தமாட்டார். முடியை தூக்கிவாறி கிளிப் போட்டுக் கொண்டு வழிந்த முகத்துடன தான் எப்போதும் இருப்பார்.

    புதிய லுக்கில் தீபா

    புதிய லுக்கில் தீபா

    ஆனால் கடந்த ஒரு மாத காலமாகவே அவரது உடை மற்றும் சிகையலங்காரத்தில் சில மாற்றங்கள் வந்துள்ளன. பளிச் நிற சேலைகளில் வித்தியாசமான ஹேர்ஸ்டைல்கிளில் வலம் வருகிறார் தீபா.

    மாற்றத்திற்கு என்ன காரணம்?

    மாற்றத்திற்கு என்ன காரணம்?

    இன்று ஆர் கே நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கும் ப்ரீஹேர் ஸ்டைலில் எடுப்பான நிறத்தில் சேலையும் அணிந்து வந்திருந்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தீபாவிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

    யாரையும் காப்பியடிக்கவில்லை

    யாரையும் காப்பியடிக்கவில்லை

    அதற்கு பதிலளித்த தீபா சிரித்துக்கொண்டே எதையும் திட்டமிடுவதில்லை. அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அந்த கெட்டப்பில் தான் நான் வருவேன். எனக்கென்று தனியாக எந்த உடையலங்காரமும் இல்லை. அதே சமயம் யாரையும் காப்பியடிக்கவும் நான் விரும்பவில்லை என்று தீபா தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+