அத்தை தொகுதியில் முதல்முறையாக களம் கண்டு சாதிப்பாரா தீபா?
ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபா முதல்முறையாக தேர்தல் களம் காண்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே.நகர் தொகுதியில் அவரது அண்ணன் மகளான தீபா போட்டியிடுவாரை என கேள்வி எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானது.
காலியான சட்டசபை தொகுதிக்கு அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். ஜெயலலிதா மறைது மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் தேர்தல்
அதன்படி அடுத்தமாதம் 12 ஆம் தேதி ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது.

அரசியலில் இறங்கியுள்ள தீபா
இந்நிலையில் புதிதாக பேரவை தொடங்கி அரசியலில் கால் வைத்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா அந்த தொகுதியில் போட்டியிடுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உருவ தோற்றத்தில் ஜெயலலிதா போல இருக்கும் தீபாவுக்கு சசியின் எதிர்ப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்���னர்.

நிரந்தர தொகுதியாக்குவார்?
தீபா தனியாக பேரவை தொடங்குவதற்கு முன்பே ஆர்கே.நகர் தொகுதி மக்கள் தங்கள் தொகுதியில் தீபாதான் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர் பேரவை தொடங்கியப் பிறகும் அவரை சந்தித்த ஆர்கே நகர் தொகுதி அதிமுக மகளிர் அணியினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரை தீபா தனது நிரந்தத தொகுதியாக்கி கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

தீபாவுக்கு ஆதரவு
அதற்கு ஆர்கே நகர் தொகு அதிமுக மகளிர் அணியினர் முழு ஆதரவு தருவதாகவும் உறுதியளித்தனர். தற்போது இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

அத்தை தொகுதியில் சாதிப்பாரா?
அத்தை தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு அத்தைப்போல் சாதிப்பாரா தீபா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு தீபாவும் தேர்தல் முடிவும்தான் பதில் சொல்ல வேண்டும்...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications