ஆஸ்பத்திரியில் இருந்தபடியே அரசு நிர்வாகத்தைக் கவனிக்கிறார் ஜெ.. சொல்கிறார் சி.ஆர்.சரஸ்வதி
அம்மா பரிபூரணமாக குணமடைந்து விட்டார்,ஆட்சி நிர்வாகத்தை மருத்துவமனையில் இருந்தே கவனித்து வருகிறார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் ஆட்சி முடங்கி உள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளதாகவும் திமுக குற்றம் சாட்டி வரும் நிலையில் ஆட்சி நிர்வாகத்தை மருத்துவமனையில் இருந்தே கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார் அதிமுக செய்தி தொடர்பாளர் சி. ஆர். சரஸ்வதி.
நமது ஒன் இந்தியா இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களின் பிரார்த்தனையால் அம்மா நலமடைந்து விட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறினார்.

அம்மா நன்றாக குணமடைந்து விட்டார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இப்போது அவர் ஓய்வில் இருக்கிறார். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு மருத்துவமனையில் இருந்தே உத்தவு போடுகிறார். ஆட்சி நிர்வாகத்தையும் அவர் மருத்துவமனையில் இருந்தே கண்காணித்து வருகிறார்.
அதிகாரிகள், அமைச்சர்கள் தங்களின் பணிகளை செய்து வருகின்றனர். ஆட்சி நிர்வாகம் நன்றாகவே நடைபெறுகிறது என்று சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநகரமாக சென்னை உருவாகி வருகிறது என்று சில தினங்களுக்கு முன்னர் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். தமிழக அரசு முடங்கி உள்ள நிலையில் சட்ட விரோத செயல்கள் தலைவிரித்தாடுவதாகவும் அவர் புகார் கூறியிருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக சி.ஆர். சரஸ்வதி இன்று பேட்டியளித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து 47 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நவம்பர் 19ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெற நான்கு தொகுதிகளிலும் தொண்டர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் கடுமையான பிரச்சாரம் செய்து வருகின்றனர். வெற்றிச் செய்தியை மட்டுமே ஜெயலலிதாவின் காதுகாளில் விழச்செய்ய வேண்டும் என்பதே அதிமுகவினரின் குறிக்கோளாக உள்ளது.












Click it and Unblock the Notifications