ஜெ. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது- அப்பல்லோ பிரதாப் ரெட்டி
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதல்வர் உணர்ந்து வருகிறார் என்று அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். எப்போது வீடு திரும்புவது என்பதை முதல்வரே முடிவு செய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்
சென்னை : உடல்நலக்குறைவால் கடந்த 44 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா விரைவாக குணமடைந்து வருவதாக அப்பல்லோ நிறுவனர் பிரதாப் சி. ரெட்டி கூறியுள்ளார். எப்போது வீடு திரும்புவது என்பதை முதல்வரே முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை நேரில் பார்த்து சிகிச்சை அளிப்பது மருத்துவகுழுவினர் மட்டுமே. சசிகலா, இளவரசி தவிர வேறு யாரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தனது உணவை எழுதி கேட்டு உண்பதாக தகவல் வெளியான நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி. ரெட்டி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். மேலும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதல்வர் உணர்ந்து வருகிறார் எனவும் அவர் தெரிவித்தார். முதல்வர் மேலும் எப்போது வீடு திரும்புவது என்பது குறித்து முதல்வரே முடிவு செய்வர் என அப்பல்லோ தலைவர் பிரதாப் கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் 21ம் தேதி அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதில் முதல்வர் பேசுவதாக கூறப்பட்டது. சரியாக 15 நாட்களுக்குப் பின்னர் அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான பிரதாப் சி. ரெட்டி இன்று முதல்வரின் உடல்நிலை குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications