அரசு ஊழியர்- ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ செப். 7 முதல் ஸ்டிரைக்
செப்டம்பர் 7 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் செப்டம்பர் 7 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். அதற்கு முன்பு 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமலாக்க வேண்டும் என்பது ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை.

இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த வாரம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய சங்க நிர்வாகிகள், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் பணிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு இதுவரை அறிக்கை அளிக்காமல் இருப்பதும் கண்டனத்துக்குரியது என்று கூறினர்.
கஸ்ட் மாதம் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநில அளவில் சென்னை கோட்டை நோக்கி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடத்தப்படும். கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத பட்சத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.
கடந்த 13ஆம் தேதியன்று முதல்வரை சந்தித்து பேசிய ஜாக்டோ -ஜியோ அமைப்பு முதல்வர் கே.பழனிசாமியிடம் மனு அளித்தனர். மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்படி மாநில அரசின் 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல் படுத்தும் முன், 20 சதவீத இடைக்கால நிவாரணம் மற்றும், பழைய ஓய் வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்புகளை சட்டசபை கூட்டத்தில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்தவித அறிவிப்பும் இன்று சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்து விட்டது.
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7 முதல் வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications