புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த 2பேர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டுக்காக அவரச் சட்டம் தமிழக அரசால் அண்மையில் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியில் ஏராளமான் மாடுகளும், மாடுபிடி வீர்களும் கலந்து கொண்டனர்.
போட்டியை காண ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். அப்போது ஜல்லிக்கட்டு மைதானத்தை விட்டு வெளியே வந்த மாடு முட்டியதில் வெள்ளைசாமி, ஜாபர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications