சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் எனும் 'சல்லி கட்டு'
சென்னை: மிருகவதை என்ற ஒற்றை சொல்லுக்குள் குறுக்கப்பட்டுவிட்டது தமிழரின் பல்லாயிரம் ஆண்டுகால ஏறு தழுவுதல் எனும் சல்லிக்கட்டு.
இந்த சல்லிக்கட்டு என்கிற ஜல்லிக்கட்டை ஒழித்துவிடுவதன் மூலம் தமிழர் பண்பாட்டின் முதன்மை அடையாளம் அழிக்கப்பட்டுவிடும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் 'மிருக ஆதரவாளர்கள்'.
இதோ நம் சங்க இலக்கியங்களில் பதிவான ஏறு தழுவதல் பாடல்கள்

மலைபடுகடாம்:
இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை
(மலை.330-335)
ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர்
(கலித்தொகை-102 : 9-10)
கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்
(கலித்தொகை- 103 : 63-64)
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை:
காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்
வேரி மலர்க் கோதை யாள்"
"நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப்
பொற்றொடி மாதராள் தோள்"
இப்படி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் ஏறுதழுவலையும் தமிழர் வாழ்வின் அங்கமாக இருந்ததையும் விவரிக்கிறது.
இந்த பாடல்களில் காளைகளின் நிறம், வகை, வீரம், வேடிக்கைப் பார்க்கும் பெண்களின் கிண்டல்கள், பெண்கள், பெற்றோரின் மன இயல்பு ஆகியவற்றைதான் இந்த சங்கப்பாடல்கள் விவரிக்கின்றன.
முல்லை, மருதம் நில காளைகள் பங்கேற்கும் இந்த வீர விளையாட்டை தமிழக பெண்களும் குரவைக்கூத்து என்ற நாட்டுப்புறப்பாடல் வாயிலாகப் பாடியுள்ளனர்.ஏறுதழுவுதல் அல்லது சல்லிக்கட்டுக்கு முன்னர் குரவைக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் தாங்கள் விரும்பும் ஆண்கள் சல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதலில் வெல்ல வேண்டும் என்பது முதன்மை விருப்பமாகவும் இருந்தது.
அது சரி ஜல்லிக்கட்டு என்பது தமிழ்ச் சொல்லா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது ஜல்லிக்கட்டு அல்ல... சல்லி கட்டு என்பதுதான் சரியானது.
அதாவது சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையமாகும். புளியங் குச்சியால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவதுதான் இந்த சல்லி வளையம். இந்த சல்லி வளையத்தைப் பிடித்து மாட்டிக் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பணமுடிப்பை கைப்பற்றுவதுதான் சல்லிக்கட்டு என்பதாகும். இதுவே நாளடைவில் ஜல்லிக்கட்டாகிவிட்டது.
பல்லாயிரம் ஆண்டுகாலமாக தமிழர் வாழ்வின் அங்கமாக இருந்து வரும் ஏறுதழுவுதல் இனி 'காட்சிப் பொருளாகுமோ' என்ற அச்சத்தை 'மிருக' ஆர்வலர்கள் உருவாக்கி வருகின்றனர்!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications