மதுரை ஆனையூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு- காவல்துறை கெடுபிடியால் பதற்றம்
மதுரை ஆனையூரில் தடையை மீறி காளையை அடக்கிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதனைக் கண்டித்து சக இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
மதுரை: மதுரை அருகே ஆனையூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்று காளையை அடக்கிய இளைஞர்களை போலீசார் கைது செய்ததால் பதற்றம் நிலவியது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் ஆனையூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியின் போது சீறிப்பாய்ந்த காளையை இளைஞர்கள் அடக்கிப்பிடித்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து காளையை அடக்கிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சக இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் போலீசாரைக் கண்டித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அப்போது ஜல்லிக்கட்டை படம் பிடிக்க சென்ற டிவி செய்தியாளர்களிடமும் போலீசார் படம் பிடிக்க கூடாது என கூறி கெடுபிடியுடன் நடந்து கொண்டனர். மேலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் திரண்டுள்ளவர்களையும் போலீசார் வெளியேறுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications