மெரீனாவை உலுக்கிய ஜல்லிக்கட்டு புரட்சி போல அண்ணா சாலையை முடக்கிய ஐபிஎல் எதிர்ப்பாளர்கள்
கடந்தாண்டு ஜனவரியில் சென்னை மெரீனா கடற்கரை பகுதி மிகப் பெரிய போராட்டக் களமாக மாறியது. இன்று ஐபிஎல் புரட்சி வெடித்துள்ளது.
Recommended Video

சென்னை: கடந்தாண்டு ஜனவரியில் சென்னை மெரீனா கடற்கரை பகுதி மிகப் பெரிய போராட்டக் களமாக மாறியது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கோரி மெரினாவில் இளைஞர்கள் குவிந்தனர். அது மிகப் பெரிய அளவில் வேகமெடுக்க மாநிலம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்தன. மெரினாவில் 23ம் தேதி வரை நடந்த அமைதியான போராட்டம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைக்க செய்தது. தற்போது அதே மெரினாவை ஒட்டியுள்ள அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கிரிக்கெட் போட்டி நடத்தக் கூடாது என்று போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. சென்னையில் இன்று இரவு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், டோணி தலைமையிலான சிஎஸ்கே விளையாட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்க உள்ளது.

இதனிடையில், காவிர் மேலாண்மை வாரியம் கோரி, பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போட்டியை நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர். அதன்படி, தற்போது சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், அண்ணா சாலையிலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் அண்ணா சாலையே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.
கடந்தாண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மெரீனாவில் போராட்டம் நடந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து நடந்த அந்த போராட்டத்தின் முடிவில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது
தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் குறித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போட்டியை யாரும் நேரில் பார்க்காமல் இருந்தால், அது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்று கருத்து கூறப்பட்டது. தற்போது நடந்து வரும் போராட்டங்களால், அனைத்து ஆங்கில டிவிக்களும் இது குறித்த செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் என்று சமூகதளங்களிலும், ஐபிஎல் எதிர்ப்பு போராட்டமே முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications