ஜல்லிக்கட்டு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்- இதுவரை மொத்தம் 80 கேவியட்!
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என இதுவரை 80 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்காக போராடினர்.
இதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் வகையில் சட்டம் ஒன்றை இயற்றியது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டுக்கான சட்டமசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. விலங்குகள் நல வாரியமும் தமிழகத்தின் சட்டத்தை ரத்து செய்யும்படி வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ளது.
பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகிய தனித்தனியே தாக்கல் செய்த மனுக்கள் வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. சட்டசபையில் நிறைவேறிய ஜல்லிக்கட்டு சட்டம் தொடர்பாக தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டத்துக்கு எதிரான மனுக்களை தங்களை கேட்காமல் விசாரிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு சட்டம் தொடர்பாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 80 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications