ஜல்லிக்கட்டு விரும்பிகளே யோசியுங்கள்.. பண்றதையெல்லாம் பண்ணிவிட்டு பழிபோட மட்டும் பீட்டாவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் ஒரு ஜல்லிக்கட்டு ஆதரவாளரா..? ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்ட விலங்குகள் நல அமைப்புகள் மீது உங்களுக்கு கோபம் கொப்பளிக்கிறதா..? உங்கள் கோபம் சரியாக இருந்தாலும், அதன் இலக்கு விலங்குகள் நல அமைப்புகள் கிடையாது என்பதை நீங்கள் ஒருமுறை யோசித்து பார்த்தீர்கள் என்றால் புரிந்துகொள்ள முடியும்.

ஏனெனில், உங்கள் கடிதத்தின் வரிகள் நியாயமானதாக இருக்கலாம், ஆனால் போய்ச்சேரும் முகவரி சரியானவருக்காக இருக்க வேண்டுமல்லவா. போலவே, நீங்கள் கோபப்பட வேண்டியது விலங்குகள் நல அமைப்புகள் மீது கிடையாது. முழுக்க முழுக்க நமது அரசியல்வாதிகள் மீதுதான்.

ஏன் என்று கேட்கிறீர்களா..? ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் செய்தது இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற என்.ஜி.ஓக்கள் கிடையாது. அரசியல்வாதிகள் செய்த தவறை மூடி மறைக்க பயன்படுத்தப்படும், பலிகடாக்கள்தான் இந்த விலங்குகள் நல அமைப்புகள். அம்புகள்தான் அவர்கள், எய்தது என்னவோ, சாட்சாத் நமது தோள்மீது கை போட்டு இப்போது ஆறுதல் சொல்லும் அதே அரசியல்வாதிகள்தான்.

நெறிமுறை

நெறிமுறை

ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு விலங்குகள் நல அமைப்புகள் 2006ம் ஆண்டிலேயே மதுரை ஹைகோர்ட்டில் மனு தொடர்ந்தது உண்மைதான். இருப்பினும், வரைமுறைகளோடு விளையாட 2011ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, ஜல்லிக்கட்டை நெறிமுறைதான்படுத்தியது.

ஜெய்ராம் ரமேஷின் கோபம்

ஜெய்ராம் ரமேஷின் கோபம்

இப்படி நன்கு நெறிமுறைப்படுத்தப்பட்ட விளையாட்டு மீது அப்போதைய மத்திய அமைச்ச்ர ஜெய்ராம் ரமேஷுக்கு என்ன கோபமோ தெரியவில்லை, அதே ஆண்டில் காளைகளை காட்சிப்படுத்துதல் விலங்குகள் பட்டியலில் சேர்த்துவிட்டார்.

பாவ மூட்டை

பாவ மூட்டை

காங்கிரஸ்-திமுக கூட்டணியிலான அப்போதைய மத்திய அரசு செய்த அந்த மாபெரும் தவறு இன்று வரை, ஜல்லிக்கட்டு ஆர்வ தமிழர்கள் தலைமீது பாவமூட்டையாக கனத்துக்கொண்டுள்ளது. சிங்கம், புலி, குரங்கு போன்றவற்றை வித்தை காட்டக்கூடாது என்பதுவரை சரி. ஆனால், அந்த பட்டியலில் வீட்டு விலங்கான காளையை ஜெய்ராம் ரமேஷ் சேர்த்த மாயம் புரியவில்லை. இந்த திருத்தத்தை வைத்துதான், இப்போதுவரை விலங்குகள் நல அமைப்புகள் வெற்றியை சுவைத்து வருகின்றன.

நிரந்தர தடை

நிரந்தர தடை

காட்சிப்படுத்துதல் விலங்காக காளை மாறியதில் இருந்து வழக்கு, என்.ஜி.ஓக்கள் பக்கமாக சாயத்தொடங்கியது. 2014ம் ஆண்டு மே மாதம், 7ம்தேதியன்று, ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.

ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யவில்லை

ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யவில்லை

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, 2015ம் ஆண்டு, அதாவது கடந்த ஆண்டு பொங்கலின்போது ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை., ஆனால், தமிழர் பாரம்பரியத்தின் பாதுகாவலர்கள் என்று பறைசாற்றிக்கொண்ட அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளோ, சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் கோரிக்கையை 18 மாதங்களாக தீவிரமாக முன்னெடுக்கவேயில்லை என்பது கசப்பான உண்மை.

திடீர் குரல்கள்

திடீர் குரல்கள்

ஒன்றரை ஆண்டுகாலமாக, மக்களை திரட்டி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சட்டத்திருத்தம் கொண்டுவர ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாத, ஜெயலலிதாவும், ஸ்டாலினும், கடந்த மாதம்தான், திடீரென ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு குரலை வெளியிட்டு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

கடைசி நாளில் கடிதமாம்

கடைசி நாளில் கடிதமாம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் முடிவடையும் கடைசி நாளில்தான், பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா ஒரு கடிதத்தை எழுதி, ஜல்லிக்கட்டு நடத்தும்வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவாருங்கள் என்ற கோரிக்கையைவிடுத்தார். குறைந்தபட்சம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும்போதாவது இந்த கோரிக்கையைவிடுத்திருந்தால், மசோதாவை ரெடி செய்திருக்க மத்திய அரசுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க முடியும்.

நாடாளுமன்றத்தில் செய்தது என்ன?

நாடாளுமன்றத்தில் செய்தது என்ன?

ஜல்லிக்கட்டுக்கு, சுப்ரீம்கோர்ட் நிரந்தர தடை விதித்த பிறகு 6 முறை நாடாளுமன்ற கூட்டம் கூடியுள்ளது. தமிழக கட்சிகள் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து உரக்க குரல் எழுப்பவில்லை. தனிநபர் மசோதாவையாவது தாக்கல் செய்து கவனம் ஈர்த்து இருக்கலாம், ஆனால் அதையும் செய்யவில்லை. ஆளும் பாஜக அரசாவது தானாக முன்வந்து சட்டத்தை திருத்தம் செய்தார்களா என்றாலும் அதற்கும் பதில் ஒரு பெரிய நோ..

ஏமாற்று வித்தை

ஏமாற்று வித்தை

இப்படி, எதையுமே செய்யாத இந்த அரசியல்வாதிகள், ஜல்லிக்கட்டு நெருங்கும் நேரத்தில் அதுகுறித்து ஆவேசமாக பேசுவதும். அதைக்கேட்டு மத்திய அரசு அறிவிக்கை வெளியிடுவதும், அது எதிர்பார்த்தபடியே சுப்ரீம்கோர்ட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவதும், யாரை ஏமாற்றும் வேலை என்பது தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது.

தமிழக கட்சிகள் என்ன செய்தன?

தமிழக கட்சிகள் என்ன செய்தன?

மத்திய அரசுக்கு ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்த எண்ணம் இல்லை என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்ட ஒன்று. ஆனால், சமீபத்தில் எழுந்த நெருக்கடியாலும், தமிழக பாஜகவின் தொடர் அழுத்தத்தாலும், மத்திய அரசு, தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்தது. இதே நெருக்கடியை தமிழக கட்சிகள் முன்பே கொடுத்திருந்தால் சட்டத்திருத்தமே வந்திருக்குமே?

பழிபோட பீட்டா

பழிபோட பீட்டா

பீட்டா போன்ற சர்வதேச அமைப்புகள் வளரும் நாடுகளில் தங்கள் வல்லாதிக்கத்தை நிலைநாட்டுகின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நாட்டு மாடுகளை அழிக்கும் வன்மம் என்.ஜி.ஓக்களுக்கு இருப்பதாக கூறப்படுவதை விசாரிக்க வேண்டியது கட்டாயம். ஆனால், பீட்டா நமது சட்டங்களை வைத்துக்கொண்டுதான் வாதாடுகிறதே தவிர பன்னாட்டு சட்டங்களைவைத்து கிடையாது. சட்டத்தின் துணை கொண்டு போராடுபவர்களை எதிர்க்கும் நாம், அந்த சட்டத்தையே மாற்றும் பொறுப்பிலுள்ளவர்களை கவனத்தில் கொள்ளாததில் உள்ளது உள்ளூர் அரசியல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+