ஜல்லிக்கட்டு போராளி ஜூலியை பாத்திரம் கழுவ விட்ட பிக்பாஸ் டீம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமைக்க, பாத்திரம் கழுவ, வீட்டை சுத்தப்படுத்த என ஒவ்வொரு வேலைக்கும் 3 பேர் கொண்ட தனித் தனி குழு நியமிக்கப்பட்டது.

பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவை தமிழில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார்.

 Jallikattu protest fame Julie for cooking team head

கடந்த 25ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சியில் நமீதா, ஓவியா உள்பட 15 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 100 நாட்கள் ஒரே வீட்டில் வசிக்க வேண்டும்.

இந்நிலையில் 2வது நாளின் தொடக்கத்தில் சமைக்க, பாத்திரம் கழுவ, வீட்டை சுத்தப்படுத்த என ஒவ்வொரு வேலைக்கும் 3 பேர் கொண்ட தனித் தனி குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவினர் தங்களின் வேலைகளை பொறுப்பாகச் செய்ய வேண்டும் என்று, ஒட்டுமொத்த குழுத் தலைவர் சிநேகன் விதிமுறைகளை படித்தார். இதையேற்று, இந்த 3 வேலைகளையும் செய்வதற்கு, அந்தந்த குழுவினர் ஒப்புக் கொண்டனர். அதில் பாத்திரம் கழுவும் குழுவுக்கு தலைவராக ஜல்லிக்கட்டு போராளி ஜூலியை பிக்பாஸ் டீம் நியமித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jallikattu protest fame Julie for cooking team head in bigg boss
Please Wait while comments are loading...