அவசர சட்டத்தினால் மிருகவதை தடைச் சட்டத்தில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு-ஆளுநர்
சென்னை: அவசர சட்டத்தின் மூலம் மிருகவதை தடைச்சட்டத்தில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தும் விதத்தில் மாநில அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். இதில் முக்கிய அம்சம் என்னவென்று, இன்று மாலை வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், மிருகவதை தடைச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு தடை உடனடியாக நீங்குகிறது என கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த சட்ட முன்வரைவை சட்டசபையில் நிறைவேற்றினால் இது நிரந்தர சட்டமாகிவிடும் என மார்கண்டேய கட்ஜு போன்ற சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆளுநர் அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: தமிழக மக்களின் கலாசார உரிமையைக் காக்கும் பொருட்டும், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு தடுக்கும் பொருட்டும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 1960ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மிருகவதைத் தடுப்பு சட்டத்தில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளிக்கும் பொருட்டு மாநில அரசு சார்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக நீங்குகிறது.
தமிழக சட்டப்பேரவை வரும் 23ம் தேதி கூட உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சட்டத்தைப் பிறப்பிப்பதற்கான நடைமுறைகளுக்கு ஏற்படும் காலதாமதத்தையும், தமிழகத்தின் இன்றைய சூழலலையும் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications