இந்த பொங்கலுக்காவது ஜல்லிக்கட்டு நடக்குமா.. மவுனம் காக்கும் மத்திய அரசு.. கண்டித்துப் போராட்டம்
வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை: ஜல்லிக்கட்டு விளையாட்டைக்கு உள்ள தடை நீக்கி இந்த பொங்கலுக்கு போட்டியை நடத்த வேண்டும் என்று ஜல்லிக்கட்டு கமிட்டி போராட்டம் இன்று நடைபெறுகிறது.
பொங்கல் திருநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்யாமல் உள்ளன. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மத்திய, மாநில அரசுகளில் மெத்தனப் போக்கால் கோபம் அடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று மதுரை வாடிவாசலில் ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும். மாநில அரசு அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
மதுரை, அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஆண்டாண்டாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு கடந்த இரண்டாண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. எனவே, இந்த ஆண்டாவது மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து போட்டியை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளன. இதுதொடர்பான போராட்டத்தை திமுக நாளை போராட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications