அம்மு பார்க், ஸ்ரீ ஸ்டேடியம்.. செம செம கொலு!
Recommended Video

சென்னை: சென்னையிலிருந்து நமது வாசகர் ஜனகா ரமேஷ் அனுப்பியுள்ள கொலு படு வித்தியாசமாக இருக்கிறது.
கடவுள் பொம்மைகளை மட்டுமே கொலு வைத்த காலம் இப்போது போய் விட்டது. விதம் விதமான கான்ச்பெட் பிடித்து கொலு வைப்பது அதிகரித்து வருகிறது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட பலவிதமான சப்ஜெக்ட்டுகளை மக்கள் கையில் எடுத்து கொலு வைக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் நமது வாசகர் ஜனகா ரமேஷ் வீட்டில் வைத்துள்ள கொலுவும் வித்தியாசமான காட்சிகளுடன் கூடியதாக உள்ளது.

இது வேற மாதிரி
வாசகர் ஜனகா ரமேஷ் சென்னை கீழ்க்கட்டளையில் வசித்து வருகிறார். தனது வீட்டில் வைத்துள்ள கொலு படங்களை அவர் நமக்கு அனுப்பி வைத்துள்ளார். பார்க்கே வித்தியாசமாக இருக்கிறது. நிறைய மெனக்கெட்டு இதை வைத்துள்ளதும் புரிகிறது.

கிரிக்கெட் கொலு
ஒரு குட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தையே இந்த கொலுவில் கொண்டு வந்து வைத்துள்ளனர். ஸ்ரீஸ்டேடியம் என்று அதற்குப் பெயரும் வைத்துள்ளனர். கிரிக்கெட் ஆடும் காட்சிகள் அடங்கிய பொம்மைகள் சூப்பராக நிறுத்தப்பட்டுள்ளன. செமையாக இருக்கிறது.

அம்மு பார்க்
அடுத்தது ஒரு பார்க். அம்மு பார்க். தெர்மகோல் அட்டையை படுக்க வைத்து பார்க்காக்கி விட்டார்கள் (செல்லூர் ராஜு எபக்ட் அதிகமாக தெரிகிறது!!!!) ஆனால், பார்க் பட் க்யூட்டாக இருக்கிறது.

அழகிய ராதை, அமர்க்கள கிருஷ்ணர்
அழகிய ராதை, கிருஷ்ணர் படத்தின் பின்னணியில் கொலு அணிவரிசை காட்சி தருகிறது. அலைமகள், கலை மகள் என தேவியர் புடை சூழ கடவுள் பொம்மைகள் பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. மொத்த கொலுவும் பிரமாதமாக இருக்கிறது, பார்க்க ரொம்ப அழகாகவும் இருக்கிறது.
[வந்துருச்சு நவராத்திரி.. கொலு வச்சாச்சா.. ஷேர் பண்ணுங்களேன் எங்களுடன்!]
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications