சசிக்கு பதவி ஆசை- அமைச்சர்கள் வீட்டு பெண்கள் ஆதரவு கூட இல்லை- ஜெ.வை தள்ளிவிட்ட நடிகர் 'தீபன்' பொளேர்
சசிகலா பதவி ஆசையால் அதிமுகவை கைப்பற்றியுள்ளார்; அவருக்கு அமைச்சர்கள் வீட்டு பெண்கள் கூட சசிகலாவை ஆதரிக்கமாட்டார்கள் எனவும் தீபன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக அமைச்சர்கள் வீட்டு பெண்கள் கூட சசிகலாவை ஆதரிக்கமாட்டார்கள்- சசிகலாவுக்கு பதவி ஆசை என ஜானகி எம்ஜிஆரின் தம்பி மகன் நடிகர் தீபன் சாடியுள்ளார்.
எம்ஜிஆர் மறைந்தபோது அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது. அதில் ஜெயலலிதா ஏற முயற்சித்தார். அவரை ராணுவ வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டார் நடிகர் தீபன். இது பெரும் சர்ச்சையாகவும் வரலாறாகவும் மாறிப் போனது.
அதிமுகவை தற்போது சசிகலா கைப்பற்றியுள்ளது தொடர்பாக "நக்கீரன்" இதழுக்கு நடிகர் தீபன் அளித்த பேட்டி:
சசிகலாவை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கினார். அதன்பிறகு சசிகலா திரும்பி வரமாட்டார் என ஒவ்வொரு தொண்டனும் எதிர்பார்த்தாங்க.

நடராஜனை கொண்டுவருவதா?
ஆனால் உண்மையான ஊழியனாக இருப்பேன்னு சொல்லிட்டு சசிகலா திரும்பி வந்தாங்க. ஜெயலலிதா இறுதிநிகழ்ச்சியில் நடராஜனை கொண்டுவந்ததில் எல்லோருக்கும் ரொம்ப வருத்தம். நடராஜனை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். நடராஜனுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் யாரையுமே கட்சியில் சேர்த்து கொள்ளமாட்டேன் என்று ஜெயலலிதா பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் இவ்வளவு தைரியமா நடராஜனை முன்னிலைப்படுத்தியது ஒவ்வொரு தொண்டருக்கும் வருத்தம்தான்.

அதிகாரத்துக்காகத்தான்...
இன்னும் நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி இருக்கிறது என்பதற்காகத்தான் சசிகலா பின்னால் பலரும் செல்கிறார்கள். அப்படி போகிறவர்களின் வீட்டு பெண்கள் கூட சசிகலாவை ஆதரிக்கமாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அச்சப்படுகிறார்கள்
ஜெயலலிதா ஒருபோதும் சசிகலாவை அரசியலுக்கு கொண்டுவர விரும்பியதே இல்லை. இது ஒவ்வொரு தலைவர்களுக்குமே தெரியும். எதிர்பாராதவிதமாக அவர்கள் பயப்படுகின்றனர்.

எம்ஜிஆர் நிலமை
எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது முதல் நாள் தொண்டர்களை சந்தித்தார். அப்போது எனக்கு 17 வயது... ஆனாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை பார்க்கலாம் என்கிற நிலைமை இருந்தது.

ஏன் காண்பிக்கவில்லை?
அப்பல்லோவில் ஜெயலலிதாவை யாரிடமும் காண்பிக்காமல் மறைத்தது ரொம்ப பெரிய விஷயம். அதுவும் அப்பல்லோ ரெட்டியே, எப்போது வீட்டுக்கு போக வேண்டும் என்பதை ஜெயலலிதான் முடிவெடுக்கவேண்டும் என கூறியது நிலைமை மோசமாக இருக்கிறது என்பதையே வெளிப்படுத்தியது.

பதவி ஆசை
அப்பல்லோ ரெட்டி மிரட்டப்பட்டிருக்கலாம். சசிகலாவைப் பொறுத்தவரையில் பதவிக்கு வர வேண்டும் என்பதுதான் உண்மையான எண்ணம். பதவிக்கு வந்த பின்னர் உண்மையான தொண்டர்களை மாற்றிவிடுவார்கள்.
இவ்வாறு தீபன் கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications