மல்லிகை பூ விலை கடும் உயர்வு - நந்தியா வட்டை பூவை சேலம் மல்லி என கூறி மோசடி!
நெல்லையில் மல்லிகைப் பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நெல்லை: மல்லிகை பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் போலியை வாங்கி மக்கள் ஏமாந்து வருகின்றனர்.
கடும் பனி பொழிவு காரணமாக தென் மாவட்டத்தில் பூக்களின் விளைச்சல் குறைந்து போய் விட்டது. குறிப்பாக மல்லிகை வரத்து மார்க்கெட்டுக்கு போதிய அளவு இல்லை. தோவாளை பூ மார்க்கெட்டு, சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ வரத்து குறைவாக இருப்பதால் நாள்தோறும் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

நாள்தோறும் சராசரியாக 100 கிலோ மட்டுமே வருவதால் அதை பிரித்து அனுப்பி வருகின்றனர். இது உள்ளூர் தேவைக்கே போதாது. மாலை மல்லிகை பூ கிலோ ரூ.6500ஐ தொட்டது. அதிக விலை கொடுக்க வியாபாரிகள் முன் வந்தும் பல இடங்களில் பூ இல்லை என்றே தெரிவித்தனர்.
இந்நிலையில் மல்லிகை பூ போன்ற நந்தியா வட்டை பூவை சேலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு சேலம் மல்லி என்ற பெயரில் நெல்லையில் விற்கப்படுகிறது. நாட்டு மல்லி போன்று இந்த பூக்கள் காட்சியளிப்பதால் இவற்றை சேலம் மல்லி என்ற பெயரில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த பூக்கள் மணப்பதில்லை. இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இந்த பூக்கள் தண்ணீர் பட்டாலும் விரியாது. இதை வாங்கி செல்லும் பொதுமக்கள் மீண்டும் வியாபாரியுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications