கொல்லைப் புறம் வழியாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க துடிக்கிறது பாஜக.. ஜவாஹிருல்லா தாக்கு
சென்னை: கொல்லைப்புறம் வழியாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறது பாஜக என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த 17 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மருத்துவமனைக்கு சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
முதல்வரின் உடல் நலம் குறித்து நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் விசாரித்தேன். அவர்கள் முதல்வரின் உடல் நலம் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிகிச்சை குறித்த விவரங்களை விளக்கிக் கூறினார்கள். முதல்வர் விரையில் குணமடைந்து பணிகளை தொடர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.
முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் நேரம் பார்த்து, சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் 356யை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்துவிட்டு குடியரசு ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறுவதும், சட்டப்பேரவையை முடக்க வேண்டும் என்று கூறுவதும் கண்டனத்திற்குரியது. அவர் அப்படி கூறியிருப்பது தமிழக மக்களுக்கு எதிரானது. தமிழகத்தில் நேரடியாக கால் பதிக்க முடியாத பாஜக, கொல்லைப்புறம் வழியாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறது. இதனை தமிழக மக்கள் எதிர்க்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications