பிரதமர் பதவியை 'ராஜினாமா' செய்தார் ஜெயலலிதா: பிரசாரத்தில் பேச்சை மாற்றினார்...
தேனி: "மத்தியில் அ.தி.மு.க அங்கம் வகித்தால் ஒரே தவணையில் தமிழக திட்டங்கள் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று தேனியில் நடந்த பிரசாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஆக இதுநாள்வரை பிரதமர் கனவோடு பிரச்சாரம் செய்து வந்த ஜெயலலிதா தற்போது மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி பேசத் தொடங்கியுள்ளார்.
சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூடிய செயற்குழு கூட்டத்தில் பேசிய போது டெல்லி செங்கோட்டையை அடைய ரெட்போர்ட் எக்ஸ்பிரஸ் கிளம்பிவிட்டது என்று கூறியிருந்தார். அதிமுகவினரும் அம்மா, பிரதமர் ஆவார் என்று கூறிவருகின்றனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ தனது பிரச்சார ஸ்டைலையே மாற்றி வருகிறார்.

தேனியில் பிரச்சாரம்
தேனி நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளர் கூழையனூர் ஆர்.பார்த்திபனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். மாலையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு காலை 9 மணியிலிருந்தே ஆட்கள் வரத்தொடங்கினர்.
வெயிலின் தாக்கம் மக்கள் வாட்டி வதைக்க பிற்பகல் 3.54 மணிக்கு வந்த ஹெலிகாப்டரில் ஜெயலலிதா வந்திறங்கினார். நேரடியாக மேடைக்கு வந்தவர் தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.

குடிநீர் பிரச்சினை தீர
அப்போது, "தேனி புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேனி அல்லி நகரம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க 63 கோடியே 83 லட்சம் செலவில் குடிநீர் திட்டம் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பென்னிகுக் மணிமண்டபம்
தேனி திண்டுக்கல் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் விவசாயத்திற்கு ஆதாரமாய் திகழும் முல்லைப்பெரியாறு அணையை கட்ட தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்த பென்னிகுக் அவர்களுக்கு லோயர்கேம்ப் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியப்பகுதியில் 1 கோடியே 75 லட்சம் செலவில் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

மத்தியில் அங்கம் வகித்தால்…
போடி- மதுரை ரயில் பாதையை மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகல ரயில்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த பணத்தை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. இதுவே அதிமுக மத்தியில் அங்கம் வகித்தால் ஒரே தவணையில் அதை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

பிரதமர் கோஷம் என்ன ஆச்சு?
முதல்வரின் பேச்சை கவனித்தால்... பிரதமர் கோஷத்தை கைவிட்டுவிட்டு... இப்போது அங்கம் வகிப்பதைப் பற்றியே பேசுகிறார். தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்க இப்போதே தயாராகிவிட்டாரோ முதல்வர் ஜெயலலிதா என்று கேட்கத்தொடங்கியுள்ளனர் அரசியல் நோக்கர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications