ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல்
சென்னை: கடந்த மாதம் 22ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சுமார் ஒரு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முதல்வர் நலம்பெற வேண்டி அதிமுகவினர் தினந்தோறும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா பூரண நலமடைந்துவிட்டதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் உதவியுடன், ஜெயலலிதா விரைந்து குணமடைந்து வருகிறார். விரைவிலேயே அவர் வீடு திரும்புவார்.
தனது வாழ்க்கை முழுக்க தமிழக மக்கள் நலனுக்காக அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. தற்போது டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் மருத்துவமனையில் ஓய்வில் மட்டும்தான் உள்ளார். அவர் தற்போது முழுக்க குணமடைந்துவிட்டார்.
ஜெயலலிதா வீடு திரும்பிய பிறகு மேலும் பல நல திட்டங்களை தமிழக மக்களுக்காக அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு சரஸ்வதி தெரிவித்தார்.
முன்னாள் அதிமுக அமைச்சரும், பாஜகவை சேர்ந்தவருமான ஹெச்.வி.ஹண்டே, அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார். இன்னும் ஒரு வாரத்திற்குள் ஜெயலலிதா வீடு திரும்பிவிடுவார் என ஹண்டே தெரிவித்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications