தமிழகம் முழுவதும் தொடரும் கனமழை - ஜெயலலிதா ஆலோசனை- நிவாரணம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கன மழை பெய்து அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயகத்தில் இன்று காலை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதா, நிவாரணப்பணிகள் உடனடியாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை மாநகரில் நள்ளிரவு முதல் விடிய விடிய கொட்டியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனிடையே
தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டும் என்று எச்சரித்துள்ளதால், மழை, வெள்ளத்தினால் மக்கள் பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப்பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று அரைமணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 6 அமைச்சர்கள் சென்றுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப்பணிகளை அமைச்சர் வேலுமணி உள்ளிட்டவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
நிவாரணம் அறிவிப்பு
இதனிடையே தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
நவம்பர் 10ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெங்கதேவன்பள்ளி கிராமத்தைச் சேர்யத சூடேசன் என்பவரின் மகள் சுகன்யா, நவம்பர் ,11ம் தேதியன்று கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி நகரத்தைச் சேர்யத திரு. சி.கே.வி. நாயர்; சிறுபாளையூர் கிராமத்தைச் சேர்யத தங்கராசு என்பவரின் மகன் முருகேசன்; சிதம்பரம் வட்டம், நாஞ்சலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவரின் மகன் நடேசன்; கலியபெருமாள் என்பவரின் மனைவி கனகம்; விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்யத காசிநாதன் என்பவரின் மகன் கதிரவன்; ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழயதவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications