சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.. பிரதமருக்கு அனுப்பி வைத்தார் ஜெ.
சென்னை காமன்வெல்த் மாநாடு தொடர்பாக தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். எனவே இந்த மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்துடன் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் அவர் இணைத்துள்ளார்.
முதல்வரின் கடிதம்...

காமன்வெல்த் மாநாடு
கடந்த 25.3.2013, 17.10.2013 அன்றைய தேதிகளில் நான் உங்களுக்கு எழுதிய கடிதங்களை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த கடிதங்களில் நான், இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை தமிழர்கள் மீது நடந்த இனப்படுகொலைகளையும், இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் தொடர்ந்து நடந்த மனித உரிமைகள் மீறல் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள், சம உரிமைகள் பறிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி இலங்கையில் நவம்பரில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தேன்.

பெயரளவுக்குக் கூட யாரும் போகக் கூடாது
இதைத்தொடர்ந்து 24.10.2013 அன்று தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவுக்குக்கூட இந்தியா சார்பில் பிரதிநிதிகள் யாரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்றும், இதுகுறித்து இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்கிவைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்திய அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளப்பட்டது.

கொஞ்சம் கூட மதிப்பளிக்கவில்லை
இந்த தீர்மானம் எனது 25.10.2013 அன்றைய தேதியிட்ட கடிதம் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. மிகவும் வருந்தத்தக்க வகையில் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு கொஞ்சம்கூட மதிப்பளிக்காமல் மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் தலைமையில் ஒரு தூதுக்குழுவை காமன்வெல்த் மாநாட்டுக்கு அனுப்பி வைத்து, இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மத்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

உணர்வுகளை சட்டை செய்யவில்லை
இலங்கை அரசாங்கத்துக்கு கடுமையான செய்தியை அனுப்புவதற்கு பதிலாக, தமிழக மக்களின் உணர்வுகளை கொஞ்சம்கூட சட்டை செய்யாமல், தமிழக மக்களை மட்டந்தட்டும் வகையிலும், தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மதிப்பளிக்காமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த உணர்ச்சிபூர்வமான விஷயத்தில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்ற உணர்வு மக்களிடம் இருக்கிறது.

மக்கள் கொந்தளித்துள்ளனர்
மத்திய அரசாங்கத்தின் இந்த முடிவால் மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பையும், அரசியல் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தமிழக சட்டசபையில் இந்த உணர்ச்சிகரமான விவகாரம் குறித்து விவாதிக்க 12.11.2013 அன்று சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. இலங்கையில் நடைபெறும் இந்த காமன்வெல்த் மாநாட்டையும், அது தொடர்பான கூட்டங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி மீண்டும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரிசீலியுங்கள், நடவடிக்கை எடுங்கள்
உங்களின் அவசர பரிசீலனைக்கும், உடனடி நடவடிக்கைக்கும் 12.11.2013 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications