திருத்தணியில் இருந்து பிரச்சாரத்தை துவங்கும் ஜெயலலிதா: ஹெலிபேட் கூட ரெடி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா திருத்தணியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாகவும் அதற்காக அங்கே ஹெலிபேட் அமைக்கும் பணி கூட முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறார்கள். தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிப்பது, வேட்புமனு தாக்கல் என்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பணிகளில் பிற கட்சிகளை முந்திக் கொண்டுள்ளார்.

சட்டசபை கூட்டம் துவங்கிய அன்றே தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யுமாறு ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபை கூட்டத்திற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இருப்பதால் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்வது எளிதாகிவிட்டது.
இந்த ஆண்டு ஜெயலலிதா திருத்தணியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்க உள்ளாராம். திருத்தணியில் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை நிறுத்த தேவையான இடத்தை தேர்வு செய்தாகிவிட்டதாம்.
இடத்தை மட்டும் தேர்வு செய்யவில்லை ஹெலிபேட் அமைக்கும் பணி கூட முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் முன்பு கட்சியில் சிலரை சேர்க்கும், நீக்கும் பணிகளை அவர் செய்து முடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications