நம்பர் 2 சென்டிமெண்ட்... இலவச பஸ் பாஸ் திட்டத்தை இன்றே தொடங்கினார் ஜெ.
சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் டோக்கன்கள் மற்றும் பேருந்து பயண அட்டைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கி, திட்டத்தினை துவக்கி வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 18.2.2016 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் டோக்கன்கள் மற்றும் பேருந்து பயண அட்டைகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கி, திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின்படி, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர் சாதன வசதி இல்லாத சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.
இதற்கென மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும். பேருந்து நடத்துநரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் ஏதும் இல்லாமல் மூத்த குடிமக்கள் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விழைவோர், இதற்கான விண்ணப்பப் படிவத்தை சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக இணையதளத்திலிருந்து (www.mtcbus.org) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இந்த விண்ணப்பங்களை சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பஸ் டெப்போக்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பத்தை எப்போது வேண்டுமானாலும் மூத்த குடிமக்கள் அளிக்கலாம். விண்ணப்பங்கள் கொடுப்பதற்கென கடைசி தேதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களில் கொடுத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
எந்தெந்த பஸ் டெப்போக்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சங்கர், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் மே.பாலகிருஷ்ணசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பிப்ரவரி 24ம் தேதி தனது பிறந்தநாள் முதல் இந்த திட்டம் செயல்படும் என்று அறிவித்த ஜெயலலிதா, 20ம் தேதியான இன்றே இலவச பஸ் பாஸ் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார். 2ம் எண் சென்டிமெண்ட் படி இந்த திட்டத்தை இன்று தொடங்கியுள்ளதாக தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications