சென்னை கட்டட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஜெ. நேரில் ஆறுதல்
சென்னை: சென்னை அடுக்குமாடிக் கட்டட விபத்து நடந்த இடத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலையில் நேரில் பார்வையிட்டார். பின்னர் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதலும் கூறினார்.
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி 2வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடந்தது.
இரவு பகலாக நடந்து வரும் பணிகளை ஏராளமான அதிகாரிகள் நேரில் முகாமிட்டு மேற்பார்வையிட்டு வருகின்றனர். நேற்று கன மழை காரணமாக சிறிது நேரம் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை விபத்து நடந்த இடத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார். சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக விபத்து நடந்த இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். மீட்புப் பணியில் 72 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

ஜெ. அறிக்கை
முன்னதாக விபத்து மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், முகலிவாக்கம் கிராமத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் நேற்று மாலை இடிந்து விழுந்ததில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளது பற்றிய தகவல் அறிந்தவுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களைப் பத்திரமாக மீட்டு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன்.
உடனேயே கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னய்யா, வருவாய் நிருவாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை ஆணையர், டி.எஸ்.ஸ்ரீதர், சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர்.

மீட்புப் பணிக்குத் தேவையான உதவிகளை வழங்கிட சென்னை மெட்ரோ ரயில், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர்கள் தேவையான உபகரணங்களுடன் அனுப்பப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், எனது உத்தரவின் பேரில், அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தேவையான மருத்துவ அலுவலர்களும், உதவியாளர்களும் சம்பவ இடத்திலேயே தயார் நிலையில் உள்ளனர். தேவையான எண்ணிக்கையிலான தீயணைப்பு வாகனங்கள், அவசர மீட்பு ஊர்திகள் ஆகியவை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை கண்டறியும் மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனது உத்தரவின் பேரில் அனைத்துத் துறையினரும் துரித நடவடிக்கை எடுத்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக இதுவரை இடிபாடுகளில் சிக்கியிருந்த 21 நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவத்தில் பத்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் உடல்களை அரசு செலவில் அவரவரது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இடிபாடுகளில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க காஞ்சிபுரம் மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த மீட்பு நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டு உயிருக்குப் போராடிய தொழிலாளர்களை மீட்ட காஞ்சிபுரம் மாவட்ட நிருவாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இடிபாடுகள் முழுவதையும் விரைவில் அகற்றி இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தக்க சிகிச்சை அளிக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications