தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கூண்டோடு நீக்கம்
சென்னை: அதிமுகவிலிருந்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகளை கட்சிப் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கழகத்தின் கொள்ளை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, என்.கே.சக்திவேல், (ஆண்டிபட்டி ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணைச் செயலாளர்), தர்மராஜ், (புள்ளிமாள் கோம்பை) (ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழு 6-வது வார்டு உறுப்பினர்), புதுராஜா, (அம்மாபட்டி கிளை இளைஞர் பாசறை செயலாளர்), சின்னச்சாமி, (டி.புதூர் கிளைக் கழகச் செயலாளர், டி.சுப்புலாபுரம் ஊராட்சி) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப் புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications