மறுபடியும் ஒரு விடுமுறைச் சிக்கலில் ஜெயலலிதா....!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் மீண்டும் ஒரு விடுமுறைச் சிக்கல் வந்துள்ளது.
அதாவது சுப்ரீம் கோர்ட்டுக்கு அக்டோபர் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே அதற்குள்ளாக ஜாமீன் பெற்றாக வேண்டிய நிலையில் ஜெயலலிதா உள்ளார்.

ஏற்கனவே இப்படித்தான் செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோதும் கூட கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் அவரது ஜாமீன் மனு விடுமுறை கால நீதிபதி முன்பு விசாரணைக்குப் போனது.
ஆனால் அவரோ விசாரணையை தள்ளி வைத்தார். இதனால் தலைமை நீதிபதி வரை நெருக்கடி கொடுத்து மீண்டும் அதே நீதிபதியை விசாரிக்க வைத்தது அதிமுக. ஆனால் 2வது முறை மனுவை விசாரிக்கக் கூடச் செய்யாமல் நீதிபதி தள்ளி வைத்து விட்டார். பின்னர் ரெகுலர் பெஞ்ச் விசாரணைக்காக ஜெயலலிதா தரப்பு காத்திருக்க நேரிட்டது.
இதேபோல தற்போது உச்சநீதிமன்றத்திற்கு அக்டோபர் 18ம் தேதி தீபாவளி விடுமுறை தொடங்குகிறது. 26ம் தேதி வரை விடுமுறையாக இருக்கும். இன்று அக்டோபர் 9ம் தேதியாகும். 18ம் தேதிக்குள் ஜாமீன் பெற்றாக வேண்டிய நிலை. ஆனால் எப்படியும் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications