ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம்... ஒளிபரப்பாத ஜெயா டிவி
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நடத்திய தியான போராட்டத்தை தமிழக தொலைக்காட்சிகள் பரபரப்பாக ஒளிபரப்பிய நிலையில் ஜெயா டிவி ஒளிபரப்பவில்லை.
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ஞாயிறன்று ராஜினாமா செய்தார். இதனையடுத்து சட்டசபைக் குழு தலைவராக சசிகலாவை தேர்வு செய்தனர். விரைவில் சசிகலா முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு தினங்களாக ஓ.பன்னீர் செல்வம் போயஸ்கார்டன் செல்லவில்லை. இதுவே ஒருவித கேள்வியை ஏற்படுத்தியது.

இரண்டு முறை முதல்வராக இருந்து பதவி விலகிய போது அது ஜெயலலிதாவிற்காக பாதுகாத்து வைத்திருந்த பதவியை பத்திரமாக விட்டுக்கொடுத்தார். மூன்றாவது முறையாக ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் 62 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இரண்டு நாட்களாக மவுனமாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது தெரியாமல் இருந்த நிலையில் திடீரென இரவு 9 மணியளவில் மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென கண்ணை மூடி அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மவுனம் கலைந்து என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். திடீரென தியானத்தை கலைத்த ஒ.பன்னீர் செல்வம், மெதுவாக எழுந்து ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி வந்து வணங்கினார். தொடர்ந்து சசிகலா மீது சராமரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் ஒ.பன்னீர் செல்வம்.
ஒ.பன்னீர் செல்வம் அமைதியாக அமர்ந்தது தமிழகம் முழுவதும் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சியை அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பின. ஆனால் இந்த காட்சியை ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை என்பதுதான் கொடுமை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications