வடக்கில்தான் மோடி அலை... தமிழகத்தில் 'ஒன்லி லேடி' அலை.. உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்!
சென்னை: 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தமிழகத்தில் அமோக வெற்றி பெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளையும் ஜெயலலிதா அலை மூழ்கடித்திருப்பதாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

வடக்கில்தான் மோடி அலை.. இங்கு இந்த லேடி அலைதான் என்பதை ஜெயலலிதா ஜெயலலிதாவின் வாக்கு கிட்டத்தட்ட பலித்து விட்டது.
எங்கு பார்த்தாலும் மோடி அலை வீசுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அந்த அலையின் சந்தடி கூட இல்லாத அளவுக்கு அதிமுக அமோக வெற்றியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது தமிழகத்தில்.
மேலும் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளையும் அதிமுக தூக்கித் தூர எறிந்துள்ளது. கிட்டத்தட்ட தமிழகத்தில் அத்தனை எதிர்க்கட்சிகளையும் அது தூக்கிப் போட்டு நசுக்கி விட்டதாகவே தெரிகிறது.
அதை விட முக்கியமாக தனித்து நின்று இத்தனை பெரிய வெற்றியை அதிமுக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடைசியாக 1998 தேர்தலில் அதிமுக 18 தொகுதிகளில் அதிகபட்சமாக வென்றிருந்தது. அதன் பின்னர் இப்போதுதான் மிகப் பெரிய வெற்றியை அது பெறுகிறது.
தேமுதிகவின் வாய்ச் சவடால், ஊர் ஊராகப் போய் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள், விஜயகாந்த்தின் கிண்டல்கள் உள்ளிட்ட அத்தனையையும் தனி ஒரு மனுஷியாக ஜெயலலிதா முறியடித்துள்ளார். இது மிகப் பெரிய சாதனைதான். மோடி தாக்கத்தையும் தாண்டி தமிழகத்தில் லேடியின் தாக்கம் வென்றிருப்பது அதிமுகவினருக்கு காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் அளவிலான வெற்றிதான் இது.
இந்த மகத்தான வெற்றியை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications