பச்சை புடவை உடுத்தி ராகு காலம், எம கண்டத்திற்கு இடைபட்ட நேரத்தில் வாக்களித்த ஜெ.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பச்சை நிற புடவை அணிந்து ராகு காலம், எம கண்டத்திற்கு இடைபட்ட நேரத்தில் வாக்களித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் காலையிலேயே வாக்களித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி காலை 7.15 மணி அளவில் கோபாலபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முதல்வர் ஜெயலலிதா தனது வீட்டிற்கு அருகே உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காலை 9.50 முதல் 10 மணிக்குள் வாக்களித்தார்.
அவரும் சரி, அவருடன் வந்திருந்த அவரது தோழி சசிகலாவும் சரி பச்சை நிற புடவை அணிந்திருந்தனர். ஜெயலலிதா ராகு காலம், எம கண்டத்திற்கு இடைபட்ட நேரத்தில் வாக்களித்துள்ளார். சிம்ம ராசிக்காரரான அவருக்கு இன்றைய நாள் ஆதாயமான நாள் ஆகும்.
முன்னதாக ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தபோதும் பச்சை நிற புடவை அணிந்திருந்தார். அவர் நேரம் வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் இருந்த பெண்களில் இரண்டு பேர் பச்சை நிற புடவை அணிந்திருந்தனர்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications