தேர்தலுக்கு முன்பாகவே மீண்டும் சிறைக்குச் செல்வார் ஜெ.. வைகோ பரபரப்பு பேட்டி
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே முதல்வர் ஜெயலலிதா சிறைக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. அதை இல்லை என்று மறுத்து விட முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் இன்று மதிமுக சார்பில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், வைகோவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதிலிருந்து...

மதுரையில் மாநாடு
மக்கள் நலக் கூட்டணியின் மாநில மாநாடு மதுரையில் ஜனவரி 26ம் தேதி நடைபெறும். வரும் சட்டசபைத் தேர்தலில் ஊழலற்ற கூட்டணியை மக்கள் நலக் கூட்டணி அமைக்கும், ஊழலற்ற ஆட்சியையும் அமைக்கும்.

ஊழல் கூடவே கூடாது
தமிழகத்தில் ஊழலே இல்லாத பொது அரசு அமைய வேண்டும் என்பதே மக்களின் ஒரே குறி்கோள். அதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். தமிழக வாக்காளர்களில் 65 சதவீதம் பேர் எந்தக் கட்சியையும் சாராதவர்கள். அவர்களின் வாக்குகள் எங்களுக்குக் கிடைக்கும்.

ஜெயலலிதாவுக்கு சிக்கல்
தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் சுப்ரீம் கோர்ட் விரைவில் தினசரி விசாரணையைத் தொடங்கவுள்ளது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமான நிலையே காணப்படுகிறது.

மீண்டும் சிறை செல்வார்
ஜெயலலிதா மீண்டும் சிறைக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே அவர் சிறைக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதை நடக்காது என்று மறுக்க முடியாது.

தலைக்கு மேல் கத்தி
இப்படி பாதகமாக நிலைமை உள்ள போதிலும் தலைக்கு மேலே கத்தி தொங்கும் நிலையிலும் கூட இனிமேலாவது ஊழலில் ஈடுபடக் கூடாது என்று இவர்கள் நினைக்கிறார்களா என்றால் இல்லை. அந்த எண்ணமே அவர்களிடம் இல்லை.

ரூ. 1000 கோடிக்கு தியேட்டர்
சென்னை வேளச்சேரியில், பீனிக்ஸ் மாலில், 11 தியேட்டர்களைக் கொண்ட ஜாஸ் என்று பெயர் மாற்றப்பட்ட வளாகத்தை் ரூ. 1000 கோடிக்கு வாங்கியுள்ளனர். இந்த ஜாஸ் நிறுவனத்தின் பெயர் மாற்றத்தின்போது அதில் முதல்வருக்கு நெருக்கமான தோழி கையெழுத்துப் போட்டுள்ளார்.

ஊழல் புரிய அச்சமே இல்லை
ஊழல் புரிவதற்கு இவர்கள் அச்சமே படுவதில்லை. வழக்குப் பற்றிக் கூட கவலைப்படாமல், நிழல் சகோதரி, உடன் பிறவாத சகோதரி இப்படி செய்கிறார் என்றால் சந்தேக நிழல் முதல்வரின் மீதும் படுகிறது. அவரை நோக்கியும் சந்தேக முள் பாய்கிறது.

லஞ்சம்
இந்த ஆட்சியில் எதை எடுத்தாலும் லஞ்சம். லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஓட்டுநர், நடத்துனர் நியமனம் முதல் எல்லாவற்றிலும் லஞ்சம்தான்.

ஆயா வேலைக்கும் லஞ்சம்
அதிகாரி வேலை முதல் ஆயா வேலைக்கும் கூட லஞ்சம்தான். லஞ்சம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை.

25 சதவீதம் கொடுத்தால்தான்
எந்த அரசுத் துறையாக இருந்தாலும் சரி 25 சதவீத கமிஷன் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை. நிர்வாகமே செல்லரித்துப் போய் விட்டது. இந்த நிலைக்கு தமிழகத்தை விடக் கூடாது, மீண்டும் இவர்களை ஆள விடக் கூடாது என்ற ஆத்திரம் மக்களிடையே உள்ளது.

எங்களது கட்சியைக் குறி வைக்கும் கருணாநிதி
எங்களது கட்சியை பிளவுபடுத்த திமுக முயலுகிறது. மாவட்டச் செயலாளர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, பதவி தருகிறோம் என்று கூறி அழைத்துச் சென்று விட்டனர். உங்களது கட்சி என்ன அவ்வளவு பலவீனமாகி விட்டதா.
கருணாநிதியே சொல்கிறார்
எங்களது கட்சியைக் குறி வைத்து குதறுகிறார்கள், சிதைக்கிறார்கள். இதெல்லாம் கருணாநிதிக்குத் தெரியாமல் நடக்கிறதோ என்று நான் கூட கூறியிருந்தேன். ஆனால், கருணாநிதியோ, அதெப்படி எனக்குத் தெரியாமல் நடக்கும். எனக்குத் தெரிந்துதான் நடக்கிறது என்று அவரே கூறி விட்டார். யார் சிதைத்தாலும் இந்த இயக்கத்தை அழிக்க முடியாது என்றார் வைகோ.
-
எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே! கஷ்டப்பட்டு சிரிக்கிறார்! அண்ணாமலை உருக்கம்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications