வெள்ளை அறிக்கை விட்டால் மட்டும் ஜெ. உயிருடன் வந்துவிடுவாரா?: ஸ்டாலின் மீது திருநாவுக்கரசர் பாய்ச்சல்
சென்னை: வெள்ளை அறிக்கை விட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு பதிலடி அளிப்பது போன்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனதால் மக்கள் கடந்த 2 மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார்கள்.
வங்கிகளில் ரூ.2 ஆயிரத்திற்கு அதிகமாக பணம் தருவது இல்லை. ஆனால் சேகர் ரெட்டியிடம் மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் அதுவும் கோடிக் கணக்கில் இருந்தது எப்படி?

தனியார் வங்கிகள்
மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பி வைக்கிறது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தெருமுனை பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

சொத்துக்கள்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துக்கள் ஏராளமாக உள்ளன. அதில் பல சொத்துக்கள் சிலரின் வசம் உள்ளது. அவற்றை மீட்க கட்சி சார்பில் சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்பு குழு அமைக்கப்படும்.

ஜெயலலிதா
ஜெயலலிதாவின் திடீர் மரணம் துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை புகழ் பெற்றது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், லண்டன் டாக்டர் என அனைவருமா பொய் சொல்கிறார்கள்? அனைவரும் பொய் சொல்கிறார்கள் என நான் நம்பவில்லை.

வெள்ளை அறிக்கை
வெள்ளை அறிக்கையோ, கருப்பு அறிக்கையோ வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா? அவரின் மரணம் பற்றிய வதந்திகள் தேவையில்லாதவை.

மதுக்கடைகள்
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூரண மதுவிலக்கே காங்கிரஸ் கட்சியின் கொள்கை ஆகும். முதலில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதை தானும் வலியுறுத்துவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் தான் திருநாவுக்கரசர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications