மழை வெள்ள மரணங்கள்: 25 குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் - ஜெ.
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த மேலும் 25 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில், கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் 25 பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பெய்த கன மழையினால், கடந்த 2ம் தேதி சென்னை, எழும்பூர் வட்டம், கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திரு. வெங்கடேசன் என்பவரின் மகன் ரவிக்குமார்; கடந்த 3ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், வேளூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. மணி என்பவரின் மகன் பாக்கியராஜ்; ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணன் என்பவரின் மனைவி சுசீலா; மகள் விஜயலட்சுமி மற்றும் மகன் வெங்கடேஷ்; சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த திரு. ராஜா என்பவரின் மகன் தயாளன்; புரசைவாக்கம் வட்டம், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த திரு. பலராமன் என்பவரின் மகன் லட்சுமிபதி; கிண்டி வட்டம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த திரு. பாலசந்திரன் என்பவரின் மனைவி சங்கராந்தி மற்றும் மகன் சீனிவாஸ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 4ம் தேதி விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்த திரு. காமதேனு என்பவரின் மகன் பிரபு; காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாணிக்கம் என்பவரின் மகன் சாமிநாதன்; கடந்த 5ம் தேதி, கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு. கெல்லன் என்பவரின் மகன் சின்னத்தம்பி; கடந்த 6ம் தேதி, திருப்போரூர் வட்டம், சிறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணன் என்பவரின் மனைவி சரஸ்வதி; மதுராந்தகம் வட்டம், கெண்டரைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. கன்னியப்பன் என்பவரின் மகன் நொச்சிலி; சென்னை, மயிலாப்பூர், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த திரு. மாரி என்பவரின் மகன் பாஸ்கர் ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி, தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. முத்தையா என்பவரின் மனைவி கிருஷ்ணம்மாள்; கடந்த 9ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திரு. அண்ணாமலை என்பவரின் மகன் பரசுராமன்; ஆகியோர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் கேட்டு துயரமடைந்தேன்.
கடந்த 4ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மகனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. கோவிந்த கவுண்டர் என்பவரின் மகன் பெரியதம்பி; கடந்த 7ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வடகுச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பரந்தாமன் என்பவரின் மகன் அகிலன்; மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜாமணி என்பவரின் மகன் சசிக்குமார்; கடந்த 8ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த திரு. பிறவிப் பெருமாள் என்பவரின் மகன் ஆறுமுக நயினார்; திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. கட்டையன் என்பவரின் மகன் முனியன்; ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; கேட்டு துயரமடைந்தேன்.
கடந்த 8ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஈச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜேந்திரன் என்பவரின் மனைவி மாரியம்மாள்; விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், செம்பொன் நெறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த திரு. மூக்கையா என்பவரின் மகன் பழமுதிர்சோலை; திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த திரு. சண்முகம் என்பவரின் மகன் செல்வம்; ஆகியோர் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 25 நபர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications