டிசம்பர் 4ம் தேதியே இறந்து விட்டார் ஜெயலலிதா.. திவாகரன் அதிர்ச்சித் தகவல்!

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியன்று மாலையே மரணமடைந்து விட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜெ. மரணம் திவாகரனின் திடுக் தகவல்

    சென்னை: அப்பல்லோவில் உடல்நலக்குறைவினால் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியன்று மாலை 5.15 மணிக்கே உயிரிழந்து விட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

    ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 4ஆம் தேதியன்று இதய முடக்கம் ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டது. இதனையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அப்போதே மிகப்பெரிய அதிர்ச்சி தொண்டர்களிடையே ஏற்பட்டது. ஆனால் ஜெயலலிதா அப்போதே இறந்து விட்டதாக தற்போது திவாகரன் கூறியுள்ளார்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா உடல் நலம் தேறி வந்தார்.டிசம்பர் 5 ஆம் தேதியன்று இரவு 11 மணிக்கு அவர் மரணமடைந்ததாக அப்பல்லோ நிர்வாகம் செய்தி வெளியிட்டது.

    இறந்த தேதியில் குழப்பம்

    இறந்த தேதியில் குழப்பம்

    6ஆம் தேதியன்று பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி மாலையே அவர் உயிரிழந்து விட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

    அப்பல்லோவுக்காக பொய்

    அப்பல்லோ மருத்துவமனையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் மரணத்தை தாமதமாக தெரிவித்தாக கூறியுள்ளார் திவாகரன். இன்னும் என்னென்ன அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகப் போகிறதோ தெரியலையே.

    என்ன அநியாயம்

    என்ன அநியாயம்

    அப்பல்லோ மருத்துவமனைகளின் பிராஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காக இப்படிச் செய்ததாக சர்வ சாதாரணமாக கூறியுள்ளார் திவாகரன். இன்னும் என்னென்ன தகவல்களை சசிகலா குடும்பம் அதிமுகவிடமிருந்தும், தமிழக மக்களிடமிருந்தும் மறைத்து வைத்துள்ளதோ தெரியவில்லையே!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+