ஜெ. கனவுகள் நிறைவேற நாங்க உதவுவோம்.. வெங்கய்யா நாயுடு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற பாஜக அரசு துணையாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உறுதியளித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா கனவுகளை நனவாக்க மத்திய அரசு துணை புரியும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

திருமங்கலம் முதல் நேரு பூங்கா இடையே வரை 7.4 கி.மீ தூரம் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பயணிக்கும். திருமங்கலம், பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட 7 வழித் தடங்களை சுரங்க மெட்ரோ ரயில் இணைக்கிறது.
ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி உரையை தொடங்கினார்.
மெட்ரோ ரயில் சேவைக்கான தொடக்க விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். மேலும், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை என்ற ஜெயலலிதாவின் கனவு நனவாகியுள்ளது என்றும், ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்களின் போக்குவரத்தில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications