ஜெ.வின் மதுரை பிரச்சார கூட்டத்தில் மயங்கிய தொண்டர் மரணம்- பலி 6 ஆக உயர்வு
மதுரை: மதுரையில் நடந்த ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டத்தில் மயங்கிய அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி 12 நாட்களுக்குப் பின்னர் நேற்று உயிரிழந்தார். இதனால் ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
சட்டசபை தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசார கூட்டங்கள் கொதிக்கும் வெயிலில் நடைபெற்றன. வெயில் கொடுமையால் ஆட்கள் வர அஞ்சியதால், ரூ.500 முதல் ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து அழைத்து வருகின்றனர்.

கூட்டம் நடந்த வெட்டவெளி மைதானத்தில் பல மணிநேரம் அடைத்து வைத்தனர். குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் மயங்கினர். விருத்தாசலத்தில் 2 பேர், சேலத்தில் 2 பேர், அருப்புக்கோட்டையில் ஒருவர் என மொத்தம் 5 பேர் ஏற்கனவே பலியானார்கள்.
இதை தொடர்ந்து உச்சி வெயிலில் கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதன் பிறகும் ஜெயலலிதா பிரசாரத்திற்காக கொதிக்கும் வெயிலில் அடைத்து வைப்பதை நிறுத்தவில்லை. மாலையில் கூட்டம் நடத்தினாலும் பிற்பகலே தொண்டர்களை அடைத்து வைப்பது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த ஏப்ரல் 27ம் தேதி மதுரை ரிங்ரோட்டில் ஜெயலலிதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. 5.30 மணிக்குதான் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வார் என்று அறிவித்தும், பிற்பகல் 2 மணி முதல் கொளுத்தும் வெயிலில் அழைத்து வரப்பட்ட தொண்டர்கள் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை. வெயில் கொடுமையாலும் தண்ணீரின்றியும் தவித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரளிக்கோட்டையை சேர்ந்த காத்தமுத்து, 43 உள்பட 6 பேர் வெயில் கொடுமையால் மயங்கி விழுந்தனர். அனைவரும் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காத்தமுத்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
12 நாட்கள் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய காத்தமுத்து, நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இவரையும் சேர்த்து ஜெயலலிதா பிரசாரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications