ஜெயலலிதா வேலூர்- நெல்லை தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மே 10ம் தேதி நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரம் மே 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று மே 12ம் தேதி வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரம் மே 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதாவின் பிரச்சார தேதியிலும் இப்போது மாற்றம் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அதன்படி, மே 10ம் தேதி நெல்லையில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம் மே 12ம் தேதிக்கும், மே 12ம் தேதி வேலூரில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம் மே 10ம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக 227 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது.

அன்றைய தினம் மாலையிலேயே ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானது.
அதன்படி, கடந்த 9ம் தேதி சென்னையில் தொடங்கிய அவரது பிரசாரம் மே 12ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை மற்றும் விருத்தாசலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் சிறிய மாற்றம் செய்து அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது, மே 10ம் தேதி நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரம் மே 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று மே 12ம் தேதி வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரம் மே 10ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்வர் ஜெயலலிதாவின் 14ம் நாள் தேர்தல் பிரசாரம் மே 10ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வேலூரில் நடைபெறுகிறது. இதில், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, கீழ் வைத்தியணான் குப்பம் (தனி), போளூர், ஆரணி, செங்கம் (தனி), கலசபாக்கம் ஆகிய தொகுதிகள் இடம் பெறுகின்றன.
15ம் நாள் தேர்தல் தேர்தல் பிரசாரம் மே 12ம் தேதி (வியாழக்கிழமை) நெல்லையில் நடைபெறுகிறது. இதில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவன்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் இடம் பெறுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications