ஆட்டுக் கறிக்கு அடிதடி- ஜெ பேரவை செயலாளருக்கு அரிவாள் வெட்டு
நீலகிரி: நீலகிரியில் ஆட்டுக் கிடாயின் கறியை கூறு போடுவதில் ஏற்பட்ட தகராறில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அமைந்துள்ள சக்கத்தா என்ற ஊரிலுள்ள கோவிலில் கிடா வெட்டி, பலி கொடுக்கும் பூஜை நடந்துள்ளது. அதில், சாமிக்கு படைத்தது போக மீதமுள்ள கறியை கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கூறு போட்டு பங்கிட்டுக்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் சக்கத்தா கிராமத்தை சேர்ந்த கோத்தகிரி ஒன்றிய ஜெ பேரவை செயலாளரான சுரேஷ் என்பவர் ஆண் வாரிசு இல்லாத தனது சகோதரி வீட்டுக்கு ஒரு கூறு கறி வழங்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும், சுரேசுக்குமிடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.
வாய்த்தகராறு முற்றிய நிலையில், முருகன் தன்னிடம் இருந்த வெட்டுக் கத்தியால் சுரேஷை வெட்டியுள்ளார். இதனால், மார்பில் காயமடைந்த சுரேஷ், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications